News November 29, 2024

சேலம்: 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று முதல் 2ஆம் தேதி வரை முக்கிய நகரங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம் பஸ் நிலையங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Similar News

News December 11, 2025

சேலம் வாக்காளர்ளே இன்றே கடைசி!

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்றே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News December 11, 2025

ஆத்தூர் அருகே கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

சேலம்: தம்மம்பட்டி அருகே மேல் கணவாய்க் காடு பகுதியில் இன்று லாரி மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மல்லியகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 11, 2025

வாழப்பாடி: முருகன் பெயரில் மத வெறியா? பரபரப்பு போஸ்டர்!

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவதில் ஏற்பட்ட விவகாரம், தமிழக முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்..
அமைதி நிலவும் தமிழ்நாட்டில்.. முருகன் பெயரில் மதவெறியா? என குறிப்பிட்டு வாழப்பாடி பகுதியில் பொது இடங்களில் கருப்பு நிறத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் யார்? எந்த அமைப்பு? என உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!