News August 19, 2024
சேலம்: 171 பேரின் உரிமம் ரத்து

சேலம் சரகத்தில் (சேலம், தர்மபுரி மாவட்டங்கள்) போக்குவரத்து விதிகளை மீறியதாக, கடந்த ஒரு மாதத்தில் 171 பேரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதத்திற்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர்.
Similar News
News November 19, 2025
சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் வழியாக திருவனந்தபுரம் நார்த் – சத்ய சாய் பி நிலையம் – திருவனந்தபுரம் நார் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் நவ.23- ஆம் தேதி திருவனந்தபுரம் நார்த்தில் இருந்தும், நவ.25- ஆம் தேதி சத்ய சாய் பி நிலையத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.
News November 19, 2025
சேலத்தில் ரூ. 2 லட்சம் கடனுக்காக 3 உயிர்கள் பலி!

சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.போலீசார் விசாரணையில் பால்ராஜ் எழுதிய கடிதம் சிக்கியது.அதில், அவர்களுக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்த சண்முகம் என்பவர் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அதனால் உயிரை மாய்த்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.பள்ளப்பட்டி போலீசார்,சண்முகத்தைக் நேற்று கைது செய்தனர்.
News November 19, 2025
கெங்கவல்லி கொலை வழக்கில் தீர்ப்பு!

சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம், வீரகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டசெல்வராஜ் (57), ராயர்பாளையம், வாணியர் தெருவை சேர்ந்த செல்வம் (55) என்பவரை கடந்த 20.09.2023 ஆம் தேதி அருவாளால் கடுமையாக தாக்கியதில் செல்வம் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.


