News March 21, 2024
சேலம்: வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

சேலம், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மலையரசன் ஆகியோரை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார், கூட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 31, 2025
பதிவறை எழுத்தர் பணி விண்ணப்பிக்க அழைப்பு!

பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், காலியாக உள்ள ஒரு பதிவறை எழுத்தர்(ஆர்.சி.,) பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல், 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். செப்.1 முதல், 30 வரை, இணைய வழியில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 31, 2025
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவியாரும், சேலம் கிழக்கு மாவட்ட தி்.மு.க. இளைஞரணி அமைப்பாளரும் வீரபாண்டி பிரபுவின் தாயாருமான லீலா ஆறுமுகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஆக.31) உயிரிழந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
News August 31, 2025
சேலம்: LIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

சேலம் மக்களே..▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு <