News April 2, 2025

சேலம்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!

Similar News

News April 9, 2025

சேலம் குவாரி உரிமம்: இனி ஆன்லைனில்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள குவாரிகளுக்கு உரிமம் பெற விரும்புபவர்கள் இனிமேல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 2025-26 ஆம் ஆண்டுக்கான குவாரி உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஏப்ரல் 15, 2025 முதல் https://www.mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். 

News April 9, 2025

அரசு பள்ளிகளில் இதுவரை 7,487 மாணவர்கள் சேர்க்கை

image

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் நேற்று வரை எல்.கே.ஜி. முதல் 8-ம் வரை தமிழ், ஆங்கில வழி வகுப்புகளில் மொத்தமாக 7 ஆயிரத்து 487 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதில் சேலம் கல்வி மாவட்டத்தில் 3,653 பேரும், தாரமங்கலம் கல்வி மாவட்டத்தில் 3,834 பேரும் அடங்குவர். அதிகப்பட்சமாக 1-ம் வகுப்பு தமிழ்வழியில் 4,858 பேரும், ஆங்கில கல்வி வழியில் 1,745 பேரும் சேர்ந்துள்ளனர்.

News April 9, 2025

சேலம் மக்களே கவனம்; நாளை இறைச்சி வாங்க முடியாது!

image

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வரும் நாளை, (வியாழக்கிழமை) மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடம் உள்ளிட்ட இறைச்சி விற்பனை நிலையங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும், விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை.

error: Content is protected !!