News March 6, 2025
சேலம் வழியாக ஹோலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக வரும் மார்ச் 07, 14 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 10, 17 தேதிகளில் ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.08 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
News March 8, 2025
சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (08.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம்.
News March 8, 2025
ஆஹா! சேலம் ஸ்பெஷல் தட்டுவடை பற்றி தெரியுமா?

சேலத்தில் மாம்பழம் மட்டுமல்ல இன்னொரு ஸ்பெஷல் இருக்கு. அதுதான் மொறுமொறு தட்டுவடை செட். அப்படி என்ன ஸ்பெஷல்? பொரிகடலை, பச்சரிசி மாவில் தயாரிக்கப்பட்ட தட்டுவடை மீது புதினா சட்னி தடவி கேரட், பீட்ரூட், வெங்காய துருவல் சேர்த்து பரிமாறும்போது ஆஹா! அப்படி இருக்கும். முன்பெல்லாம் அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, பழைய பஸ் ஸ்டாண்டில் கிடைத்தது தற்போது சேலம் மாநகராட்சி முழுவதிலும் தெருவோர கடைகளில் கிடைக்கிது.