News April 7, 2025

சேலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில்கள்

image

பாம்பன் பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் வழியாக கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயிலும், ஓஹா- ராமேஸ்வரம் ரயிலும் பழையபடி ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கோவை-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (16618) நாளை (ஏப்ரல் 08) இயக்கத்தில் பாம்பன் பாலம் வழியே ராமேஸ்வரம் செல்கிறது.

Similar News

News April 8, 2025

ஏப்.15- ல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களைப் பூர்த்திச் செய்யும் பொருட்டு வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

கோடை காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

image

கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்த ஐஸ் வாட்டர் குடிப்பதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதிலிருந்து விடுபட மண் பானையில் வைக்கப்பட்ட நீரை அருந்தலாம். இதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாது சத்துக்கள் ஜீரண சக்தியை உருவாக்கும் என சேலம் மருத்துவர் தனபால் அறிவுறித்தியுள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.

News April 8, 2025

ஓமலூர் அருகே சாலை விபத்தில் முதியவர் பலி

image

ஓமலூர் பல்பாக்கியை சேர்ந்தவர் நல்லதம்பி (60). இவர் தனது உறவினரான சித்தையன், 73. என்பருடன் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி டூவீலரில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னாள் சென்ற டிப்பர் லாரி திடீரென திரும்பியதால், டூவீலர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த நல்லதம்பி உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!