News December 5, 2024
சேலம் வழியாக செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக சம்பல்பூர்- ஈரோடு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை (08311/08312) வரும் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.11,28,25, ஜன.01,08,15,22,29, பிப்.05,12,19,26, மார்ச் 05 ஆகிய தேதிகளில் சம்பல்பூரில் இருந்தும், டிச.13,20,27, ஜன.03,10,17,24,31, பிப்.07,14,21,28, மார்ச்.07 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்தும் இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
Similar News
News September 16, 2025
சேலம்: தவெக தலைவர் விஜய் வருகை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார சுற்றுப்பயணம் சேலத்தில் மேற்கொள்ள உள்ள நிலையில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரிடம் அனுமதி கேட்டு சேலம் மத்திய மாவட்ட த.வெ.க செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று மனு வழங்கியுள்ளனர்.
News September 16, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் நேற்று (15.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக கோவை-ஜெய்ப்பூர்-கோவை ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் (06181/06182) அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.16- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அக்.16, 23,30,நவ.06 தேதிகளில் கோவை- ஜெய்ப்பூர், அக்.19, 26,நவ.02,09 தேதிகளில் ஜெய்ப்பூர்- கோவை சிறப்பு ரயில்கள் இயக்கம்.