News April 3, 2025
சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில் நாளை ரத்து

யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சேலம், ஆத்தூர் வழியாக இயக்கப்படும் யஷ்வந்த்பூர்- புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் (16573) நாளையும், மறுமார்க்கத்தில், புதுச்சேரி- யஷ்வந்த்பூர் ரயில் (16574) நாளை மறுநாளும் (ஏப்ரல் 05) முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News October 27, 2025
சேலம்: புனித பயணம் மேற்கொள்ள மானியம்!

சேலம் மாவட்டத்திலிருந்து நாக்பூரில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவிற்கு பங்கேற்கச் செல்ல விருப்பமுள்ளவர்கள் பௌத்த சமயத்தினருக்கு www.bcmbcmz.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நேரடியாக ரூ.5000 மானியம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். நவ.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
சேலம்: நாளை நடைபெறும் முகாம்கள் குறித்த விவரம்!

சேலத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் (அக்.28) நடைபெறும் இடங்கள்;
1) பாப்பம்பாடி சுய உதவிக் குழு கட்டிடம் பாப்பம்பாடி.
2)ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை.
3)தேவூர் பேரூராட்சி அலுவலகம் தேவூர்.
4) மேச்சேரி தனலட்சுமி மஹால் கந்தனூர்.
5)பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி திருமண மஹால் கருமந்துறை.
6) தலைவாசல் மகாலட்சுமி திருமண மண்டபம் நாவலூர்.
News October 27, 2025
சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.27) “நாம் ஹெல்மெட் அணிவது நமக்காக மட்டும் அல்ல, நம்மை நேசிப்பவர்களுக்காகவும்.
கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுங்கள்.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல்துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!


