News January 24, 2025
சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம் வழியாக செல்லும் சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில்களை (06057/ 06058) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இன்று (ஜன.24) சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும், மறுமார்க்கத்தில், ஜன.26- ஆம் தேதி திருவனந்தபுரம் வடக்கில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Similar News
News December 13, 2025
ஆத்தூர் அருகே ஷாக் கொடுத்த அதிகாரிகள்!

ஆத்தூர்:கெங்கவல்லி சுவேத நதி – நடுவலூர் ஏரி நீர்வழி வாய்க்காலை ஆக்கிரமித்துக் 30 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவர்களுக்கு செப். 12 அன்று ஓதியத்தூரில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு டிச.8க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகள் அறிவுறித்தினர். இந்தநிலையில் கூடுதல் அவகாசம் கேட்ட 6 பேரின் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்புகளை துண்டித்த அதிகாரிகள் உடனடியாக காலிசெய்ய உத்தரவிட்டனர்.
News December 13, 2025
சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்!

சேலம் புதிய பேருந்து நிலையம் அடுத்துள்ள மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் காம்பவுண்ட் சுவரில் திமுக இளைஞரணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சி.எம்.எஸ். மசூது என்பவரின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டுக்கு குஸ்கா தான்,” என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 13, 2025
உணவுப் பொருள் விநியோகம் செய்ய அரிய வாய்ப்பு!

சேலம் மாவட்ட மகளிர் திட்டத்தின் கூட்டங்கள், பயிற்சிகளுக்குத் தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள குழுக்கள் தங்கள் விலைப்புள்ளிகளை டிச.26 அன்று மாலை 5.00 மணிக்குள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு!


