News March 19, 2024
சேலம் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள்
மார்ச் 23, 30 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும், மார்ச் 24, 31 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2024
சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்
➤சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ➤ரேஷன் கடை வேலைக்கு நேர்முகத் தேர்வு ➤அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: சாலை மறியல் ➤வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் ➤மேலும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி விலகல் ➤ உடற்பயிற்சியின் போது ஜிம்மிலேயே உயிரிழந்த நபர் ➤சேலத்திற்கு வருகை தரும் அமைச்சர் ➤தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு ➤சேலம் எனப் பெயர் வந்தது எப்படி?.
News November 19, 2024
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக கோவையில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (03358), இன்று (நவ.20) நள்ளிரவு 12.50 மணிக்கு பதிலாக சுமார் 5 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக, அதிகாலை 06.00 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 19, 2024
ரேஷன் கடை வேலைக்கு நேர்முக தேர்வு
சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் நவ.28 முதல் டிச.7 வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நவ.7 முதல் நவ.9 வரையும் நடக்கிறது. இந்த நேர்முகத் தேர்வானது, சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.