News March 21, 2024

சேலம்: ரூ.4.75 லட்சம் பறிமுதல்

image

சேலம் மாவட்டம் நாழிகல்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் பிரகாஷ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.4.75 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சேலம் தெற்கு வட்டாட்சியர் மற்றும் தேர்தல் உதவி அலுவலருமான செல்வராஜிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 8, 2025

சேலம்: 10-வது படித்தால் அரசு வேலை.. நாளை கடைசி!

image

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நாளை நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இதை சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 8, 2025

சேலத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை

image

தமிழகம் வழியாக புதிதாக ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, எர்ணாகுளம் – பெங்களூரு இடையிலான ரயில் நாளைய தினம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. ரயிலின் நேர அட்டவணையை, காலை 5.10 மணிக்கு கே.எஸ்.ஆர்.பெங்களூரு ரயில் நிலையத்தில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 5.23 மணிக்கு சேலம், 9 மணிக்கு திருச்சூர், பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்

News November 7, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.07) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!