News March 15, 2025
சேலம் ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் குரூப்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேலம் ரயில்வே போலீசார் வாட்ஸ் அப் குழுவை (94981-01963) அறிமுகம் செய்துள்ளனர். மேலும் “அறிமுக இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவு பொருள்களை வாங்கி உண்ண வேண்டாம். நகை அணிந்து கொண்டு உறங்க வேண்டாம். சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டால் 139, 1512 அல்லது 9962500500 அழைக்கவும்” என தெரிவித்துள்ளனர். இதை ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 16, 2025
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் 3,500 வீடுகள்

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 580 வீடுகளும், வாழப்பாடி ஒன்றியத்தில் 429 வீடுகளும், கொளத்தூர் ஒன்றியத்தில் 379 வீடுகளும், எடப்பாடி ஒன்றியத்தில் 335 வீடுகளும், தலைவாசல் ஒன்றியத்தில் 279 வீடுகளும், ஆத்தூர் ஒன்றியத்தில் 190 வீடுகளும் என மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 3,500 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தகவல்.
News March 16, 2025
சேலத்தில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு

கோடை வெயிலால்,சேலம் மாவட்டத்தில் 200 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது. மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் பீர் வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2025
80 புதிய வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்க முடிவு

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே குறைவான சேவை உள்ள வழித்தடங்களில் கூடுதலாகவும், போக்குவரத்து சேவை இல்லாத வழித்தடங்களில் புதிதாகவும், மினிபஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 80 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.