News March 19, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

சேலம் வழியாக செல்லும் கோவை-திருப்பதி-கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22616/22615) LHB பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 22- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 20, 2025
குட்காவை விற்ற 1,236 கடைகளுக்கு ரூ.3.20 கோடி அபராதம் விதிப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் தடைச் செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 1,236 கடைகளுக்கு ரூபாய் 3.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
News March 20, 2025
சேலத்தை சேர்ந்தவர் கொலை: மேலும் 5 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் நேற்று சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜான் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பூபாலன், சரவணன், கார்த்திகேயன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேர் இன்று (20.03.2025) கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் இருந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவக்குமார் ஆகிய 5 பேரை சித்தோடு போலீசார் கைது செய்துள்ளனர்.
News March 20, 2025
சேலம் கோட்டத்தின் சார்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்களையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (மார்ச் 21) முதல் மார்ச் 24- ஆம் தேதி வரை 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று சேலம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.