News December 21, 2024
சேலம் ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு

ஓசூர் ரயில்வே யார்டில் பராமரிப்பு காரணமாக, கோவை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிச.23, 24, 25, 27, 28, 31, ஜன.1, 4, 5, 6 ஆகிய தேதிகளில் காலை 07.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்தும், பெங்களூரு கண்டோன்மெண்ட் – கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டிச.23,24,25,27,28,31, ஜன.1,4,5,6 ஆகிய தேதிகளில் மதியம் 02.20 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News April 28, 2025
சங்ககிரி அருகே விபத்து இளைஞர் உயிரிழப்பு

சங்ககிரி அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹரிபாஸ்கர் (வயது 25) என்ற இளைஞர், எதிரே வந்த மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும், காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி இன்று ஏப்ரல் 27 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.
News April 27, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல்27ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.