News April 6, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

“பசூர்- ஊஞ்சலூர் ரயில்வே நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, வரும் ஏப்ரல் 08, 11 தேதிகளில் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்படும்; மறுமார்க்கத்தில், செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; மேற்கண்ட ரயில் கரூர்- ஈரோடு இடையே இயக்கப்பட மாட்டாது” என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News September 17, 2025
சேலம் வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தீபாவளி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை (06054/06053) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வரும் செப்.30 முதல் அக்.29 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல், கரூர், நாமக்கல், சாத்தூர், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
News September 17, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (16.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
சேலம் தட்டு வடை செட்டை விரும்பி சாப்பிட்ட உதயநிதி!

கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, பெண்கள் தயாரித்த சேலத்தின் புகழ்பெற்ற தட்டு வடை செட்டை ஆர்வத்துடன் ருசி பார்த்தார். மேலும், மூலிகை தேநீரையும் பருகினார்.