News April 1, 2025
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு புதிய கோட்ட மேலாளர் நியமனம்!

சேலம் ரயில்வே கோட்டத்தின் புதிய கோட்ட மேலாளராக, வடகிழக்கு ரயில்வே மண்டல அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றி வரும் அதிகாரி பன்னாலால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை சேலம் கோட்ட மேலாளராக நியமித்து ரயில்வே வாரியத்தின் இயக்குநர் ரவீந்தர்பாண்டே உத்தரவிட்டுள்ளார். தற்போது சேலம் கோட்ட மேலாளராக பணியாற்றி வரும் பங்கஜ் குமார் சின்ஹாவிற்கு புதிய பணியிடம் இன்னும் ஒதுக்கப்படவில்லை.
Similar News
News April 10, 2025
சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தமிழ் புத்தாண்டு, விஷு, புனிதவெள்ளியை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 10, 11, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (06089/ 06090) இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
News April 10, 2025
சேலம் அரசு பேருந்தில் அட்டூழியம் 3 பேர் கைது

சேலத்தில் இருந்து வெள்ளிமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஏறிய மூன்று பேர், உள்ளே செல்லாமல் படியிலேயே நின்றுகொண்டு, நடத்துனர் செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன்,அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மாணவர் விஜய் (20), ரீகன் (21) மற்றும் பெயிண்டர் விக்ரம் (23) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
News April 9, 2025
சேலத்தில் நாளை மதுக்கடைகள் இயங்காது!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 10) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.