News April 16, 2025
சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

“விலை ஆதரவு திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பச்சைப்பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சேலம் மற்றும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பயன்பெறலாம்.விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் விளைபொருட்களை விற்பனை செய்துகொள்ளலாம்” என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சேலம் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் திரும்ப பெறும் பணிக்காக இன்றும் நாளையும் (நவ.22, 23) அனைத்து வாக்கு சாவடிகளிலும் முகாம்கள் நடைபெறுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)
News November 22, 2025
சேலம்: 10-வது போதும்.. SUPER சம்பளத்தில் வேலை!

சேலம் மக்களே, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) 1383 எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 – ரூ.1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News November 22, 2025
சேலம்: டிகிரி இருந்தால் வேலை.. நாளை கடைசி!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


