News March 4, 2025

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

image

விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025 ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது- சேலம் மாவட்ட ஆட்சியர்

Similar News

News March 4, 2025

மான் இறைச்சி பறிமுதல்: ரூ. 1 லட்சம் அபராதம்

image

சேலம், சேர்வராயன் வடக்கு வனச்சரக அலுவலர் பழனிவேல் தலைமையில் பொம்மிடி பிரிவு வனவர் உதயகுமார், வனக்காப்பாளர் பிரசாந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் பொம்மிடி பிரிவு எல்லைக்குட்பட்ட மோரூர் பகுதியில் பகலில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த மாது (62) என்பவரை பிடித்து சோதனை செய்ததில், மான் இறைச்சி கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News March 4, 2025

நில அளவை; இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்!

image

சேலத்தில் உள்ள நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்துக்கலாம்.நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி (அ)அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.நில அளவை செய்யப்பட்ட பின்னர், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு https://eservices.tn.gov.in/ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவிப்பு 

News March 4, 2025

சேலம் விமான பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

image

வரும் மார்ச் 31- ஆம் தேதி சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின் ஆகிய நகரங்களுக்கு இருமார்க்கத்திலும் தினசரி விமான சேவையை வழங்கவுள்ளதாக அலையன்ஸ் ஏர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://allianceair.in/book என்ற இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!