News April 22, 2025
சேலம் மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு!

கோடை விடுமுறை காலம் தொடங்கியுள்ளதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் கவனமுடனும், எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை பெற்றோர் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டுமென தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதை, உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 5, 2025
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

குழந்தைத் திருமணங்கள் சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றம் என்பதை வலியுறுத்தி, சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு படத்தை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும், குழந்தைத் திருமண தகவல் தெரிந்தவுடன் காவல்துறையையோ அல்லது 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 5, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை, குற்றங்களை தடுக்கும் முயற்சியாக ‘மூன்றாவது கண்’ திட்டத்தை வலுப்படுத்தி வருகிறது. பொதுமக்கள், கடைகாரர்கள் தங்களது வீடு, கடை, வீதிகளில் சிசிடிவி கேமிரா பொருத்துமாறு போலீசார் கேட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களை பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி முக்கிய உதவியாக இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 5, 2025
பெண்களுக்கான மசாலா தயாரிப்பு பயிற்சி!

ISRED நிறுவனம் சார்பில் சேலம் பெண்களுக்கு மசாலா தயாரிப்பு பயிற்சி குறைந்த கட்டணத்தில் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சாம்பார் பொடி, ரசம் பொடி, சிக்கன் மசால், மட்டன் மசால், சுக்கா மசால், கரம் மசால், கூட்டு மசால் போன்ற பல்வேறு மசாலா பொருட்கள் தயாரிப்பு நேரடியாக கற்பிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 8300852717 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


