News February 15, 2025
சேலம் மாவட்ட காவல் அதிகாரிகள் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 15 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்
Similar News
News November 24, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி வழங்கிய ஆட்சியர்!

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நல உதவிகள் கோரி விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் நான்கு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மொத்தம் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான நவீன இரு சக்கர நாற்காலி வாகனங்களை வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News November 24, 2025
ஏற்காடு ட்ரக்கிங் செல்வோர் கவனத்திற்கு!

ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி–குண்டூர், கொண்டப்பநாயக்கன்பட்டி–குண்டூர் டிரெக்கிங் ரூட்டுகளுக்கான ஆன்லைன் புக்கிங் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான ஏற்பாடுகள் முடிந்தவுடன் புக்கிங் மீண்டும் தொடங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
News November 24, 2025
சேலம் மாநகர காவல்துறை – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரை

சேலம் மாநகர காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு அறிவுரை வெளியிடப்பட்டது. போக்குவரத்து சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்பான் மற்றும் எச்சரிக்கை கோன்களை அகற்றாமல் பாதுகாப்பாக கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றினால் விபத்துக்களைத் தவிர்க்கலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


