News September 30, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், தினசரி விழிப்புணர்வுப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று (செப். 29) “ஆன்லைன் மோசடியில் உங்கள் பணத்தை இழந்தால், தாமதமின்றி 1930 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
Similar News
News December 8, 2025
எடப்பாடி சிறுமி புகைப்படத்தை வெளியிட்டதால் விபரீதம்!

எடப்பாடியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி அண்ணாமலை (32) என்பவர், 14 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி அவரை பின்தொடா்ந்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அண்ணாமலையைக் கண்டித்தனா். இந்தநிலையில் சிறுமியுடன் அவா் எடுத்த புகைப்படத்தை கடந்த 5 ஆம் தேதி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.இதில் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து அண்ணாமலையைக் கைதுசெய்தனர்.
News December 8, 2025
சேலம் வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 8, 2025
தலைவாசலில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!

சேலம் மாவட்டம், தலைவாசல் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின் ஊழியர் கிருஷ்ணன்.இவர் தனது முதல் மனைவியான பெரியம்மாள் கீழே விழுந்து இறந்துவிட்டார் என உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார். போலீசாரின் தீவிர விசாரணையில், கிருஷ்ணன் தனது மனைவியைத் தானே அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, தலைவாசல் போலீசார் கிருஷ்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


