News May 23, 2024
சேலம் மாவட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் !

மழை, காற்றினால் சாலையில் மரங்கள் ஏதேனும் சாய்ந்தால் உள்ளாட்சி அமைப்பினர், நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர் அவ்விடத்திற்கு சென்று உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர்செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல் 21ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
News April 21, 2025
சேலம் மாவட்டத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.21) மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது. இதனால் வாகன ஓட்டிகள், உணவு டெலிவரி ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்தனர். இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டில் இன்று சேலத்தில் அதிகபட்ச அளவாக 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
News April 21, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) நாளை (ஏப்.22) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக 08.25 மணி நேரம் அதாவது மாலை 04.15 மணிக்கு புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.