News March 26, 2025
சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த 913 மாற்றுத் திறனாளிகள் உள்பட 41 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 5, 2025
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

குழந்தைத் திருமணங்கள் சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றம் என்பதை வலியுறுத்தி, சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு படத்தை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும், குழந்தைத் திருமண தகவல் தெரிந்தவுடன் காவல்துறையையோ அல்லது 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 5, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை, குற்றங்களை தடுக்கும் முயற்சியாக ‘மூன்றாவது கண்’ திட்டத்தை வலுப்படுத்தி வருகிறது. பொதுமக்கள், கடைகாரர்கள் தங்களது வீடு, கடை, வீதிகளில் சிசிடிவி கேமிரா பொருத்துமாறு போலீசார் கேட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களை பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி முக்கிய உதவியாக இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 5, 2025
பெண்களுக்கான மசாலா தயாரிப்பு பயிற்சி!

ISRED நிறுவனம் சார்பில் சேலம் பெண்களுக்கு மசாலா தயாரிப்பு பயிற்சி குறைந்த கட்டணத்தில் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சாம்பார் பொடி, ரசம் பொடி, சிக்கன் மசால், மட்டன் மசால், சுக்கா மசால், கரம் மசால், கூட்டு மசால் போன்ற பல்வேறு மசாலா பொருட்கள் தயாரிப்பு நேரடியாக கற்பிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 8300852717 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


