News April 21, 2025
சேலம் மாவட்டத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.21) மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது. இதனால் வாகன ஓட்டிகள், உணவு டெலிவரி ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்தனர். இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டில் இன்று சேலத்தில் அதிகபட்ச அளவாக 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
Similar News
News September 16, 2025
சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 16, 2025
2 சிறப்பு எஸ்.ஐ.க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்!

பல்வேறு புகார்களுக்கு உள்ளான பூலாம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ. பரமசிவம், மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ. மணி, ஆகிய 2 பேரையும் அதிரடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 2 எஸ்.ஐ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூபாய் 337.46 கோடி பயிர்க்கடன்!

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 3,89,785 விவசாயிகளுக்கு ரூபாய் 3,266.35 கோடி பயிர்க்ககடன்களும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் ரூபாய் 1,038 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 34,434 விவசாயிகளுக்கு ரூபாய் 337.46 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.