News October 23, 2024

சேலம் மாவட்டத்தில் மழை பொழிவு நிலவரம்

image

சேலம் மாவட்டத்தில் இன்று (அக்.23) காலை 6 மணி வரை 231.1 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, சேலம் மாநகரில் 40.7 மி.மீ. மழையும், வாழப்பாடியில் 40 மி.மீ. மழையும், ஏற்காட்டில் 31.4 மி.மீ. மழையும், ஏத்தாப்பூரில் 23 மி.மீ. மழையும், கரியக்கோவிலில் 20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழைப் பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 23, 2025

சேலத்தில் கர்ப்பிணி தற்கொலை

image

சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஹேமதர்ஷினி(26). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமான நிலையில் இருக்கும் ஹேமதர்ஷினிக்கும் அவரது கணவர் சீனிவாசனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஹேமதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News December 23, 2025

தாரமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி!

image

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருத்தானூர் பிரிவு சாலை பகுதியில் நேற்று லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் (Divider) பலமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் காரியமங்கலத்தைச் சேர்ந்த அருணாச்சலம் (30) என்பவர் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரணை!

News December 23, 2025

சேலம் மக்களே நாளை இங்கு மின்தடை!

image

சேலம் மாவட்டத்தில் நாளை (டிச.24) தொப்பூர், தளவாய்ப்பட்டி, செக்காரப்பட்டி, எலத்துார், கம்மம்பட்டி, சென்றாயரெட்டியூர் வெள்ளார், எருமப்பட்டி, கொண்ரெட்டியூர், குண்டுக்கல், மூக்கனுார், தீவட்டிப்பட்டி, ஜோடுகுளி, சோழியானுார் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் மின்சாரத் துறை தகவல் தெரிவிப்பு. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!