News April 18, 2024

சேலம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 7, 2025

சேலம்: திருமண வாழ்வில் சோகம்!

image

சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகையன். இவருடைய மனைவி காந்திமதி (28), நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார், காந்திமதியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அதில் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் காந்திமதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News December 7, 2025

சேலம் வருகிறார் விஜய்? தவெக மாஸ்டர் பிளான்!

image

வரும் டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அதை முடித்தவுடன் சேலத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தகவல். விரைவில் தேதியை குறிப்பிட்டு போலீசாரிடம் அனுமதி கடிதம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் தவெகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

News December 7, 2025

சேலம்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!