News November 23, 2024
சேலம் மாவட்டத்தில் இன்றைய நிகழ்வுகள்

சேலம் மாவட்டத்தில் (நவ.23) இன்றைய நிகழ்ச்சிகள். ➤மூவேந்தர் கலை அரங்கில் திரையிடலும் கலந்துரையாடலும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ➤தெய்வீகம் திருமண மண்டபத்தில் விவசாய கண்காட்சி இரண்டாம் நாள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. ➤ சேலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. ➤சொத்து வரி, குடிநீர் இணைப்பு வரி ரூ.7.59 லட்சம் நிலுவை வைத்திருந்ததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு.
Similar News
News November 8, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News November 8, 2025
சேலம்: பிளஸ்-2 மாணவிக்கு இன்ஸ்டாவில் தொல்லை!

சேலம் சூரமங்கலம் அருகே காசக்காரனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37), இவர் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
சேலம் கோட்டத்தில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள்!

சேலம் மாவட்டத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் நேற்று முதல் வருகிற 10-ம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.


