News March 27, 2025

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மார்ச் 27 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️காலை 8 மணி அருள்மிகு எல்லை பிடாரி அம்மன் திருக்கல்யாணம் குமரசாமிப்பட்டி ▶️காலை11 மணி சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம் ▶️மாலை 4 மணி ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட சுகாதார அலுவலகம் ▶️மாலை 6 மணி எல்லைப்பிடாரியம்மன் திருக்கோவில் பங்குனி மாத குண்டம் மிதி திருவிழா

Similar News

News April 20, 2025

சேலம்-மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்

image

கரூர்- திருச்சி பிரிவில் உள்ள கரூர்-வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) நாளை மறுநாள் கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 20, 2025

ஐபிஎல் சூதாட்டம்: தோல்வியால் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!

image

சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி தானங்காடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளி கார்த்திக் என்பவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரு குறிப்பிட்ட அணி வெற்றி பெறும் என்று ரூ.50,000 பந்தயம் கட்டியுள்ளார். அவர் கட்டிய அணி தோல்வியடைந்ததால் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 19, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும், காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்ரல்19 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.

error: Content is protected !!