News March 13, 2025
சேலம் மார்ச் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மார்ச் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள் காலை 10:30 மணி சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி நீரேற்று நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
காலை 11 மணி அரசு மருத்துவமனை முதல்வர் பத்திரிகையாளர் சந்திப்பு
காலை 10 மணி சிவராஜ் சித்த வைத்திய கல்லூரியில் பெண்கள் தின கொண்டாட்டம்
காலை11 மணி ஜெயராம் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு பயிலரங்கம்
மாலை 6 மணி ஈஸ்வரன் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்
Similar News
News March 13, 2025
சேலத்தில் இன்றைய இரவு ரோந்து விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 13 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
News March 13, 2025
சேலம் பாஜக மண்டல மாநாடு தேதி அறிவிப்பு

சேலம் பாஜக பெருங்கோட்ட பாரதிய ஜனதா மண்டல மாநாடு ஓமலூரில் ஏப்ரல் 19ஆம் தேதி முத்து மஹாலில் எதிரில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து பாஜக பெருங்கோட்ட தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
News March 13, 2025
சேலத்தில் MLA மீது தாக்குதல்: H.ராஜா கண்டனம்

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியுமான அருள் MLA மீது தாக்குதல் நடத்திய திமுகவினரின் வன்முறை போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும், திமுக ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை. எதிர்கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை காட்டாட்சி நடக்கிறது என H ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.