News April 21, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல் 21ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
Similar News
News April 22, 2025
ஏப்.25- ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் 2025 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25.04.2025, வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215-ல் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும் விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு!
News April 22, 2025
எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
News April 21, 2025
சேலம் மாவட்டத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.21) மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது. இதனால் வாகன ஓட்டிகள், உணவு டெலிவரி ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்தனர். இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டில் இன்று சேலத்தில் அதிகபட்ச அளவாக 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.