News March 10, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில், இரவு நேரங்களில் சட்டவிரோத சம்பவங்களைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இரவு சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மார்ச் 12, 19 தேதிகளில் ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108) ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோட்டிற்கு செல்லும். இந்த ரயில்கள் ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News March 11, 2025
சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (11.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம்.
News March 11, 2025
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (மார்ச் 11) திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி. ஆத்தூர், நரசிங்கபுரம், கெங்கவல்லி, ஏத்தாப்பூர், பைத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.