News March 9, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (09.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். 

Similar News

News March 10, 2025

கோடை வெயிலின் தாக்கம் பீர் விற்பனை இருமடங்காக உயர்வு

image

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் ரூ.5 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, ரம், விஸ்கி போன்ற மதுபானங்கள் விற்பனை சரிந்து பீர் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. மேலும், சில கடைகளில் கூலிங் பீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மதுபிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

News March 10, 2025

மார்ச் 21- ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்!

image

சேலம் மேற்கு கோட்ட அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம், வரும் மார்ச் 21- ஆம் தேதி மதியம் 03.00 மணிக்கு நடக்க உள்ளது. புகார்களை ‘அஞ்சல் கண்காணிப்பாளர், மேற்கு கோட்டம், சேலம்-636005’ எனும் முகவரிக்கு வரும் மார்ச் 18- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, பதிவு தபால், விரைவு தபால் போன்ற சேவை தொடர்பான் புகார்களையும் கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பலாம்.

News March 10, 2025

சேலம்: அரசு தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலை

image

தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு முதல் B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.8500 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். கடைசி நாள் 11.3.25 ஆகும். விண்ணப்பிக்க <>இங்கே<<>> க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!