News April 3, 2025
சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடு

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். மேலும் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற ஏப்ரல் 17-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
சேலம்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.
News November 5, 2025
சேலம் அவசர எண்கள் அறிவித்தார் கலெக்டர்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள எண்களுக்கு அழைக்கலாம என சேலம் கலெக்டர் அறிவிப்பு: கெங்கவல்லி – 04272451943,ஆத்தூர்- 04282-251400, ஏற்காடு -04292-223000,ஓமலூர்-04290-220224,மேட்டூர்-04298-244063, எடப்பாடி-0427-2450026,சங்ககிரி 04283-240242, வீரபாண்டி-0427-2904666, சேலம் மேற்கு-0427-2212844,சேலம் வடக்கு-0427-2212844,சேலம் தெற்கு
0427-2461616!SHAREit
News November 5, 2025
சேலத்தில் அதிரடி மாற்றங்கள்!

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த வந்த கபீர், சென்னைக்கும், நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, சேலத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தவிர சேலம் மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி(தொடக்க கல்வி), பதவி உயர்வில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


