News September 13, 2024

‘சேலம் மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு’

image

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “2019இல் உயர்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான ‘பாரதி இளம் கவிஞர்’ போட்டி இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு, சேலம் கல்லூரி மாணவி நிவேதாவுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையுடன் விருது வழங்கப்பட்டது” என்றார்.

Similar News

News January 3, 2026

கெங்கவல்லி: பெற்றோர் கழுத்தை அறுத்த மகன்!

image

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணன் (70) மற்றும் அவரது மனைவி பாப்பாத்தி (60). இவர்களது மகன் தர்மராஜா (40), ஆட்டோ டிரைவரான இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பெற்றோர்கள் தட்டிகேட்ட போது ஆத்திரமடைந்த தர்மராஜா, கத்தியால் இருவரின் கழுத்தையும் அறுத்தார்.இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து தர்மராஜாவைக் கைது செய்தனர்.

News January 3, 2026

சேலம் வாக்காளர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

சேலத்தில் உள்ள 1,346 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் வரும் இன்று மற்றும் நாளை(ஜன.4) ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் புதிய வாக்களர் அடையாள அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.மேலும் <>voters.eci.gov.in <<>>என்ற இணையதளம், Voter Helpline App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.SHAREit

News January 3, 2026

ஏற்காடு மலைப்பாதையில் இளைஞர் பலி!

image

சேலம் மல்லூரைச் சேர்ந்த தனியார் நிறுவன உதவி மேலாளர் ஆனந்த் (25), நேற்று முன்தினம் ஏற்காட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். சேர்வராயன் கோவில் வளைவில் அதிவேகமாகச் சென்றபோது நிலைதடுமாறி விபத்துக்குள்ளான அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!