News April 25, 2025
சேலம் மதுக்கடைகளை மூட உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான கடைகள், பார்கள், மன மகிழ் மன்றங்கள் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு கண்டிப்பாக மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி உத்தரவு விடுத்துள்ளார். மீறி திறந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News April 26, 2025
சேலம் உள்பட 5 மாவட்டங்களில் ஏப்.28- ல் பி.எப். குறைதீர் கூட்டம்!

சேலம் உள்பட 5 மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 28- ஆம் தேதி பி.எப். குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதில் பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், முதன்மை முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள் குறைகளைத் தெரிவித்து தீர்வுக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 26, 2025
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

சேலம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் 0427-2401750 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது <
News April 26, 2025
சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில் சேவை நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு- சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (08312), சாம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311) சேவைகள் வரும் மே முதல் வாரத்துடன் முடிவடையவிருந்த நிலையில் மேலும் 2 மாதத்திற்கு அதாவது ஜூன் மாதம் வரை இந்த ரயில் சேவையை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.