News August 14, 2024
சேலம் மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
JUST IN:சேலத்தில் டெண்டர் கோரியது தமிழக அரசு!

சேலத்தில் நவீன வசதிகள் கொண்ட நூலகம் அமைக்கப்படும் என கடந்தாண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் ரூ. 73 கோடி மதிப்பீட்டில் பாரதிதாசன் பெயரில் சேலத்தில் நூலகம் அமைப்பதற்கான டெண்டரை (Tender) தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. டெண்டர் நடைமுறைகள் முடிந்த பிறகு, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி, இந்த நூலகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
News November 7, 2025
சேலத்தில் கொடூர கொலை!அண்ணன் வெறிச்செயல்

சேலம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் (45) அவரது தம்பி தியாகராஜன் (37) இருவரும் மதுவுக்கு அடிமையான நிலையில் அடிக்கடி தகராரில் ஈடுபட்டு வந்த்தாக கூறப்படுகிறது.இந்தநிலையில் இன்று மது போதை தலைக்கு ஏறிய நிலையில் அண்ணன் சந்தோஷ் தம்பி தியாகராஜனை கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு போன் வாயிலாக அவரது உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸ் விசாரணை!
News November 7, 2025
சேலம்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

சேலம் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க


