News August 10, 2024

சேலம் மக்களே இவரை பார்த்தால் உடனே கூறவும்

image

சேலம் அரசு மருத்துவமனையில் 5 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தையை, பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, கடத்திச் சென்ற பெண்ணின் அடையாளம் மற்றும் படத்தை வெளியிட்டு, சேலம் மாநகர நுண்ணறிவுப் பிரிவு, 949810094, சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை 9498181218 உள்ளிட்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

சேலம்: முதல் நிலை சரிபார்த்தல் – ஆட்சியர் தகவல்!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 2026 தேர்தலில் சேலத்தில் பயன்படுத்தப்படும் 8,412 வாக்குப்பதிவு எந்திரங்கள், 4,888 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கு அளிக்கும் கருவிகளை பெங்களூர் பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், வருகின்ற டிசம்பர்-11ம் தேதி முதல்நிலை சரிபார்த்தல் பணி நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கௌரவிக்கும் விதமாக, தமிழக அரசு ஆண்டுதோறும் சமூக நீதி பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான விருது பெற தகுதி உடையவர்கள், தங்களது முழு விவரங்களை பூர்த்தி செய்து வருகின்ற 18ம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

சேலம்: அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

image

சேலம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஒன்றான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.

error: Content is protected !!