News December 6, 2024
சேலம் புத்தகத் திருவிழா: வாசகர்களின் கவனத்திற்கு

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்று வரும் சேலம் புத்தகத் திருவிழா, வரும் டிச.09-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தமிழ் வினைச்சொல், அகரமுதலி உள்பட 7 புத்தகங்கள் 35% சிறப்பு தள்ளுபடியுடன் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
JUST IN: வாழப்பாடி அருகே பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

வாழப்பாடி: கல்வராயன்மலை கருமந்துறையில் இருந்து நேற்று இரவு சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, கரியக்கோயில் அணை கோழிகூப்பிட்டான் பாலம் அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் பயணிகள் 10 பேர் படுகாயமடைந்தனர். பயணிகளை மீட்ட கருமந்துறை போலீசார், முதலுதவி சிகிச்சைக்காக தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 17, 2025
சேலத்தில் இங்கு செல்லத் தடை!

கோவை சம்பவம் எதிரொலியாக சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இருந்து டேனிஷ்பேட்டை செல்லும் சாலையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து வந்த நபர்களிடம் வனத்துறை அதிகாரி எச்சரிக்கை பலகையை காண்பித்து அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தார். எனவே பொதுமக்கள் யாரும் அவ்வழியை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.16) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


