News March 27, 2024
சேலம்: பாமக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

2024 சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.அண்ணாதுரை தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவியிடம் இன்று தாக்கல் செய்தார். இதில் சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News September 18, 2025
சேலம் அருகே மாணவி துடிதுடித்து பலி!

சேலம்:வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டியைச் சேர்ந்த வடிவேல் (35), தனது மகள் ஜீவஜோதியுடன் (13) நேற்று டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அரூர்-சேலம் புறவழிச்சாலையில் சென்ற போது இவர்களுக்குப் பின்னால் வந்த மற்றொரு டூவீலர் மோதியது. இதில் கீழே விழுந்த ஜீவஜோதி மீது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஏறி இறங்கியது.இதில் சம்பவ இடத்திலேயே மாணவி துடிதுடித்து உயிரிழந்தார். விபத்து குறித்து வீராணம் போலீசார் விசாரணை!
News September 18, 2025
சேலம் வழியாக செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் பெங்களூரு-கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (22665/22666) பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக இருக்கைகளுடன் கூடிய 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் செப்.22- ஆம் தேதி அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில் சேவையில் மாற்றம்!

ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (செப்.18) சேலம் வழியாக செல்லும் ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் (56108) திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படமாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.