News March 19, 2024
சேலம்: பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராமதாஸ்!

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் (19.03.2024) இன்று மதியம் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்பி ஆகியோர் சேலம் வருகை தந்துள்ளனர். இன்று காலை பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 1, 2025
சேலம் அருகே மயில் மோதியதில் பெண் பலி!

சேலம் அருகே நாவப்பாளையம் பகுதியில் பிரபுதேவா மற்றும் மனைவி கோகிலா நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டு திரும்பும்போது கல்பாரப்பட்டி அருகே ஒரு மயில் திடீரென விழுந்தது. மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். கோகிலா பலத்த பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். பிரபுதேவா லேசான காயத்துடன் உயிர் மீட்டார். சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 1, 2025
ஆத்தூரில் போஸ்கோ வழக்கில் ஒருவர் கைது

ஆத்தூர் பகுதியில் வசிக்கும் விகாஸ் வயது 21 இவருக்கும் ஆத்தூர் பகுதி சேர்ந்த ரேஷ்மி வயது 18 கடந்த 11ஆம் தேதி திருமணம் செய்துவிட்டு இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் ரேஷ்மி கணவருடன் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் 17 வயதில் திருமணம் செய்ததால் ரேஷ்மி கொடுத்த புகாரின் பெயரில் விகாஸ் மீது போஸ்கோ சட்டத்தில் ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News December 1, 2025
சேலம்: சிறுமியிடம் அத்துமீறிய டிரைவர்!

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த ஊனத்தூர் பகுதியில் தனியாக இருந்த 11 வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அம்பாயிரம் (52) என்பவர் அத்துமீறி நடந்துள்ளார். சிறுமி சத்தம் போடவே, அவர் தப்பி சென்றுள்ளார். இது குறித்து நேற்று ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.


