News March 4, 2025

சேலம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு 

image

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெர்சலை கட்டுப்படுத்தும் வகையில் சேலத்திலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்பட உள்ளது என்றும் அதன் பிறகு அங்கிருந்து தாம்பரம் எழும்பூருக்கு வேறு பஸ்களில் பயணம் செய்யலாம் என சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இதில் சாதாரண பேருந்துகள் மற்றும் குளிர்சாதன பேருந்துகள் அடங்கும்.

Similar News

News March 5, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் போலீசார் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (மார்ச் 4) இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News March 4, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய மார்ச் 4 இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News March 4, 2025

மான் இறைச்சி பறிமுதல்: ரூ. 1 லட்சம் அபராதம்

image

சேலம், சேர்வராயன் வடக்கு வனச்சரக அலுவலர் பழனிவேல் தலைமையில் பொம்மிடி பிரிவு வனவர் உதயகுமார், வனக்காப்பாளர் பிரசாந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் பொம்மிடி பிரிவு எல்லைக்குட்பட்ட மோரூர் பகுதியில் பகலில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த மாது (62) என்பவரை பிடித்து சோதனை செய்ததில், மான் இறைச்சி கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!