News December 31, 2024
சேலம்: நட்சத்திர விடுதிகளுக்கான கடும் கட்டுப்பாடு

சேலத்தில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு உரிமம் பெற்றுள்ள நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளைக் முடித்துக் கொள்ள வேண்டும். வளாகத்திற்குள் வரும் வாகன விவரங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும், ஆபாசமில்லாமலும் நடத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News January 9, 2026
சேலம்: IOCL நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியரிங் வேலை!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாகவுள்ள 394 Junior Engineering Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Diploma, Engineering,B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ. 25,000 முதல் ரூ. 1,05,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.<
News January 9, 2026
ஜன.22 முதல் சேலத்தில் விளையாட்டுத் திருவிழா!

தமிழக முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ்,”இது நம்ம திருவிழா” என்ற பெயரிலான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் வரும் ஜனவரி 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் ஜன.21-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்
News January 9, 2026
தாரமங்கல்: கல்யாண ஆசை காட்டி பணத்தை சுருட்டிய பெண்!

தாரமங்கல் அருகே ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு, டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்பெண் இவரைத் திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். மேலும் ‘CMC Global App’ என்ற பணத்தை முதலீடு செய்தால் பல கோடி வருமனாம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி 70 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளார். சேலம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!


