News March 20, 2024
சேலம் திமுக வேட்பாளர் இவர்தான்!

சேலம் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக செல்வ கணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 6, 2025
சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

சேலம் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்காக பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டுள்ளது. ஓட்டுநர்கள் பயணிக்கும் போது மொபைல் போனை பயன்படுத்துவது விபத்துக்கான முக்கிய காரணமாக இருப்பதால், “You Can’t Do Both – Don’t Text While Drive” என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் பொதுமக்களை, உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தி, பயணத்தின் போது மொபைல் பயன்படுத்தாமல் கவனமாக ஓட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
News December 6, 2025
சேலம்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

சேலம் மாநகர காவல் துறை சார்பில், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் போது, அதிக வெளிச்சம் கொண்ட கண்களை பூச செய்யும் விளக்குகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், இந்த விளக்குகளினால்எதிரே வரும் வாகனங்களில் பயணிப்போர் விபத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால், வாகன ஓட்டிகள் இதுபோன்ற விளக்குகளை தவிர்க்க வேண்டும் என அறிவித்துள்ளது.
News December 6, 2025
தலைவாசல் அருகே மின்சாரம் தாக்கி நடந்த சம்பவம்!

கெங்கவல்லி தாலுகா ஆணியம்பட்டி புதூரைச் சேர்ந்த தொழிலாளி விஸ்வநாதன் (39) நேற்று தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே கட்டுமானப் பணியில் இருந்தபோது, மேலே சென்ற மின்கம்பி அவரது கையில் தொடுவதால் மின்சாரம் தாக்கி கீழே வீழ்ந்து கடுமையாக காயமடைந்தார். ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


