News April 1, 2025
சேலம்- டெல்லி செல்லும் லாரிக்கு ரூ.1,000 கூடுதல் செலவு

தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12.00 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வால் சேலத்தில் இருந்து டெல்லி செல்லும் ஒரு லாரிக்கு ரூபாய் 800 முதல் ரூபாய் 1,000 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 9, 2025
சேலம்: விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் முழு மானியம்

சேலம் மாவட்ட தோட்டக்கலைத் துறையின் மூலம், செயல்படுத்தப்படும் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், மார்க்கோனி மற்றும் தேக்கு மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வரப்பு ஓரத்திற்கு ஒரு ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும், வயல் முழுவதும் நட 500 மரக்கன்றுகளும் என ஒரு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 எக்டர் நடவு செய்ய வழங்கப்படும் என்றார்.
News December 9, 2025
சேலம்: கேழ்வரகு விவசாயிகளுக்கான அறிவிப்பு

தமிழ்நாட்டில் கேழ்வரகு பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அரசாணையில் உள்ள நெறிமுறைகளின்படி உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்தினால், அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் www.tncsc.tn.gov.inஇணையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக மைசூரில் இருந்து சேலம் வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரு – தூத்துக்குடி ரயில் (06283) டிசம்பர்-23,27 தேதியில் மைசூரில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடி – மைசூரு ரயில் (06284) டிசம்பர்-24,28 தேதியில் தூத்துக்குடியில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மைசூரு சென்றடையும்.


