News April 3, 2025
சேலம்: கொலை வழக்கில் 7 பேர் கைது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பங்காளியூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 30ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 7 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மனைவி, மகனை தேடி வருகின்றனர்.
Similar News
News April 12, 2025
பறவையினம் தேர்வு செய்ய அழைப்பு

சேலம் மாவட்டத்திற்கான பறவையினம் தேர்வுசெய்ய, பொதுமக்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. சேலம், ஆத்தூர் வனக்கோட்டம் மற்றும் சேலம் பறவையியல் கழகம் இணைந்து நமது சேலத்திற்கான பறவையை தேர்வு செய்ய, பொதுமக்களிடம் விருப்பங்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் சேலத்தின் பறவையினை தேர்வு செய்ய இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் மே-4 வெளியிடப்படும்.
News April 12, 2025
சேலம் 417 அங்கன்வாடி பணியிடம்; விண்ணப்பிப்பது எப்படி?

சேலத்தில் காலியாக உள்ள 417 அங்கன்வாடி பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படவுள்ளது. சம்பளமாக ரூ.4100 – 24200 வரை வழங்கப்படும். இதர தகவல்களை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். அல்லது <
News April 12, 2025
வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

ஏப்.13 முதல் ஜூன் 01 வரை திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவையும், ஏப்.14 முதல் ஜூன் 02 வரை மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவையும் நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.