News April 9, 2025
சேலம் குவாரி உரிமம்: இனி ஆன்லைனில்!

சேலம் மாவட்டத்தில் உள்ள குவாரிகளுக்கு உரிமம் பெற விரும்புபவர்கள் இனிமேல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 2025-26 ஆம் ஆண்டுக்கான குவாரி உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஏப்ரல் 15, 2025 முதல் https://www.mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) பணிகள் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் சேலத்தில் நவ.4ம் தேதி முதல் டிச.4ம் தேதி வரை சிறப்பு தீர்த்திருத்த முகாம் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு
News November 2, 2025
சேலம் அருகே நொடிப்பொழுதில் அரங்கேறிய துயரம்!

சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரம் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 55). இவர் நேற்று முன்தினம் காலை அடிவாரம் பகுதியில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது,அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (19) என்பவர் ஓட்டி வந்த டூவிலர் தங்கம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து கண்ணங்குறிச்சி போலீசார் விசாரணை!
News November 2, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.01) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


