News March 24, 2025

சேலம்; காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

image

ஈரோடு மாவட்டம் சித்தார்கேசரிமங்கலத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆபரேட்டரான யுவராஜன் (வயது 34). இவர் நேற்று தனது நண்பர்களான மேச்சேரி பகுதியை சேர்ந்த 3 பேருடன் கூனாண்டியூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். யுவராஜன் ஆற்றில் இறங்கி குளித்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 26, 2025

கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு பூஜை!

image

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று, இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து, மூன்றாம் ஆண்டு துவக்க விழா நாளை திங்கட்கிழமை 27.10.2025 காலை 9 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு 108 சங்காபிஷேக பூஜை நடை பெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற உள்ளது.

News October 26, 2025

சேலம்: அம்மா உணவகத்தில் கேஸ் கசிவால் பரபரப்பு!

image

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று மதியம் உணவு விற்பனை முடிந்த நிலையில் அனைத்து பணியாளர்களும் வீடு திரும்பினர். மாலை திடீரென கேஸ் கசிவு வெளியானது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கசிவை சரி செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

News October 26, 2025

சேலம்: அரசு ஐ.டி.ஐ.,யில் சேர ஆட்சியர் அழைப்பு!

image

சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கையில்; சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில், 2025ம் ஆண்டு நேரடி சேர்க்கை வரும், அக்.31 வரை நடக்க உள்ளது. அதில் கடைசலர், டிஜிட்டல் போட்டோகிராபர், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன் போன்ற பிரிவுகளில் சேரலாம். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

error: Content is protected !!