News January 23, 2025
சேலம் கால்நடை பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு இன்று காலை தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிய வருகிறது. இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கட்டிடங்கள் அனைத்து பகுதிகளும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை, குற்றங்களை தடுக்கும் முயற்சியாக ‘மூன்றாவது கண்’ திட்டத்தை வலுப்படுத்தி வருகிறது. பொதுமக்கள், கடைகாரர்கள் தங்களது வீடு, கடை, வீதிகளில் சிசிடிவி கேமிரா பொருத்துமாறு போலீசார் கேட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களை பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி முக்கிய உதவியாக இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 5, 2025
பெண்களுக்கான மசாலா தயாரிப்பு பயிற்சி!

ISRED நிறுவனம் சார்பில் சேலம் பெண்களுக்கு மசாலா தயாரிப்பு பயிற்சி குறைந்த கட்டணத்தில் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சாம்பார் பொடி, ரசம் பொடி, சிக்கன் மசால், மட்டன் மசால், சுக்கா மசால், கரம் மசால், கூட்டு மசால் போன்ற பல்வேறு மசாலா பொருட்கள் தயாரிப்பு நேரடியாக கற்பிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 8300852717 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
News December 5, 2025
சேலம் விமான நிலையத்திற்கு பயணிகள் கோரிக்கை!

சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும், அலையன்ஸ் ஏர் நிறுவனம், அடிக்கடி தனது சேவையை ரத்து செய்து வருவதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், எனவே இதுபோன்று அடிக்கடி ரத்து செய்யாமல் பயணிகளின் நலன் கருதி, முறையாக விமான சேவை இயக்க வேண்டும் என்று பயணிகள், காமலாபுரம் விமான நிலையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


