News March 14, 2025
சேலம் ; கல்லூரி பஸ் மோதியதில் சிறுவன் பலி

சேலம் : வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரையின் மகன் கிருபாகரன்( 10) அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று(மார்ச் 14) காலை கிருபாகரன் பள்ளிக்குச் சென்றபோது தனியார் கல்லூரி பேருந்து கிருபாகரன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் கி பலத்த காயம் அடைந்த கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 15, 2025
சேலத்தில் புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி!

சேலத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை பொறியாளர்களுக்கு, புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்படும். தங்கி பயிலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கான கால அளவு 18 வாரம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com இணையத்தில் பதிவுச் செய்துக் கொள்ளலாம்.
News March 15, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கியமான அறிவிப்பு

யார்டில் தண்டவாளம் மாற்றியமைக்கும் பணி காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் ஆழப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) நாளை (மார்ச் 16) போத்தனூர்- இருகூர் மார்க்கத்தில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையத்திற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News March 15, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

கோவையில் இருந்து அரியானா மாநிலம், ஹிசார் ரயில் நிலையத்திற்கு இருமார்க்கத்திலும் இயக்கப்படும் வாராந்திர ரயில்கள் (22475/ 22476) இன்று (மார்ச் 15) முதல் சோதனை முயற்சியாக கர்நாடகாவின் கும்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்.