News August 8, 2024

சேலம் கலெக்டர் சீர்மரபினருக்கு முக்கிய அறிவிப்பு

image

சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் பொருளாதார ரீதியில் மேம்பட கொண்டுவரப்பட்ட “SEED” திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் https://dwbdnc.dosje.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

Similar News

News September 18, 2025

காய்ச்சல், வலி மாத்திரை விற்றால் நடவடிக்கை!

image

சேலம் சரகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் செயல்பட்டு வருகிறது. காய்ச்சல், தூக்கம், வலி நிவாரண மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி கொடுக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டத்தின் கீழ் கடைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும், கடையின் உரிமம் ரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 18, 2025

அமைச்சர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் தொடங்கியது!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.18) அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன், மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேகோ சர்வ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News September 18, 2025

சேலத்தில் நாளை எங்கெல்லாம் முகாம்? முழு லிஸ்ட்!

image

சேலம், செப்டம்பர் 19 “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறும் இடங்கள் லிஸ்ட் 1.மல்லமூப்பம்பட்டி: சாந்தி ராதாகிருஷ்ணன் திருமண மண்டபம், 2.மேட்டூர்: கற்பகம் திருமண மண்டபம், சதுரங்காடி3.ஓமலூர்: சமுதாயக்கூடம், செவ்வாய் சந்தப்பேட்டை சாலை 4.பனமரத்துப்பட்டி: கிராம செயலக அலுவலகம், குரங்கு புளிய மரம் 5.வாழப்பாடி: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, குமாரபாளையம் 6.சங்ககிரி: பார்வதி பாய் திருமண மண்டபம், சங்ககிரி

error: Content is protected !!